கோவை மாவட்டம் வால்பாறை அருகே தோணிமுடி எஸ்டேட் மூன்றாவது டிவிசனில் உள்ள 25 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறித்து விட்டு மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தேயிலை பறிக்க சென்றபோது தேயிலைச்செடிக்குள் படுத்திருந்த காட்டு மாடு திடீரென்று பாய்ந்து தாக்கி சென்றுள்ளது இதில் வட மாநிலமான அசாமை சேர்ந்த கனியாலி வயது 72 மற்றும் அஸித்தா கத்தான் வயது 19 ஆகிய இரு தொழிலாளர்களும் காயமடைந்தனர் உடனே உடனிருந்த தொழிலாளர்கள் மற்றும் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மானாம்பள்ளி வனவர் முத்து மாணிக்கம் தலைமையிலான ஜான் பால், வினோத்குமார், செல்வக்குமார், ரமேஷ் குமார், விவேக் உள்ளிட்ட மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் இருவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவரையும் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வனத்துறையினர் காட்டுமாடு தாக்கி காயமடைந்த இருவர் குடும்பத்தினருக்கும் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் ஆலோசனையின்படி வனத்துறை சார்பாக தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது