ஒடசல்பட்டியில் தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்க கோரிக்கை விளக்க கருத்தரங்கம்
தருமபுரி:
தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்கத்தின் சார்பில் பணி பாதுகாப்பு,ஊதிய உயர்வு,மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க கருத்தரங்கம் ஒடசல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம்,ஒடல்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சந்திரன் வரவேற்றார்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜி.ஆர்.இரவிந்திரநாத்,தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு பொது செயலாளர் மற்றும் தமிழ்நாடு டெங்கு,கொசு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்க கவுரவ செயலாளர் ஏ.ஆர் சாந்தி,இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி தருமபுரி மாவட்ட செய்லாளர் எஸ்.கலைச்செல்ம் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு டெங்கு,கொசு ஒழிப்பு முன்கள பணியாளர் சங்க கவுரவ செயலாளர் ஏ.ஆர் சாந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் தமிழ்நாட்டில் 36 ஆயிரம் பேர் ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிளில் பணியாற்றுகின்றனர்.இவர்கள் டெங்கு,மலேரியா காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இயற்கை பேரிடர்,காலரா,வாந்திபேதி மற்றும் கொரோனா காலங்களிலும் தொடர்ந்து முன்கள பணியாளர்களாக பணிபுரிகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு ஊதியம் மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது.தருமபுரி மாவட்டத்தில் தினக்கூலியாக ரூ 380 மட்டும் தான் வழங்கப்படுகிறது.
மூன்று மாதங்களுக்கு ஒரு மூறை பணி ஆணை வழங்கப்படுகிறது.
அதுவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது.
கல்வி திறன் அற்றறவர்கள் என்று தவறாக கூறி ஊதியம் குறைவாக வழங்குகின்றனர்.2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிப்பித்தஉத்தரவு படி ரூ 6780 அகவிலை படி வழங்க வேண்டும். ஆனால் அகவிலைப்படி வழங்காமல் தினக்கூலி வழங்கப்படுகிறது.இதனால் தொழிலாளர்கள் மாதம் ரூ 6780 நஷ்டமடைகின்றனர்.எனவே தினக்கூலி வழங்குவதை மாற்றி மாத ஊதியம்,தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும். மேலும் தருமபுரி மாவட்டத்தில் அரூர்,கம்பைநல்லூர்,பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பாரப்பட்டி,பாலக்கோடு,
மாரண்டஅள்ளியில்ல உள்ள அதிகாரிகள் பணி ஆணையை தனியார் ஏஜென்சிகள் மூலம் வழங்குகின்றனர்.அதிகாரிகளின்தொழிலாளர் விரோத நடவடிக்கையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த பணியாளர்களை வீட்டு வேலை,தோட்ட வேலை மற்றும் இவர்களுக்கு சம்மந்தம் இல்லாத வேலைகளில் ஈடுப்படுத்துகின்றனர்.இதை தவிர்க்க வேண்டும்.இந்த பணியாளர்களை பொது சுகாதாரதுறையுடன் இணைத்து ஊதியம் வழங்க வேண்டும்.
கர்நாடகா மற்றும் டெல்லியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதை போன்று தமிழ்நாட்டிலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திதருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்படும்.நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மாநிலம் முழுவதும் விரைவில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொது செயலாளர் கே.மணி,கொசுப்புழு ஒழிப்பு சங்க நிர்வாகிகள் சதீஸ்,சின்னமணி,
பூமிநாதன்,உள்ளாட்சி பதியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன்,செல்வி,மேனகா மற்றும் தொழிலாளர்கள்கலந்து கொண்டனர்.