தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

கோயமுத்தூர், வெள்ளக்கோவில், திருப்பூர், ஈரோடு கரூர் பல்லடம் உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, அறங்காவலர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

இதேபோல திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில் கூட்டுறவுநகர் செல்வவிநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தேங்காய் வெள்ளைப் பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *