வலங்கைமான் செங்குந்த முதலியார் சமூகத்தின் நாட்டாமையாக வள்ளலார் மளிகை உரிமையாளர் உ.ப. கார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வர்த்தக சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிப்பு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வர்த்தக சங்கத்தின் நீண்ட கால உறுப்பினர், வள்ளலார் மளிகை கடையின் உரிமையாளருமான உ.ப. கார்த்திகேயன் வலங்கைமான் செங்குந்தர் முதலியார் சமூகத்தின் நாட்டாமையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வலங்கைமான் வர்த்தக சங்கத்தின் சார்பில் தலைவர் கே. குணசேகரன், செயலாளர் ராயல் ஜி. திருநாவுக்கரசு, பொருளாளர் எஸ்.புகழேந்தி, துணைத் தலைவர் என். மாரிமுத்து, இணைச் செயலாளர்கள் எஸ். சிவசங்கர், ஒய்.யாகூப் சலீம், ஸ்ரீ குமரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் எஸ். இளங்கோவன் உள்பட வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.