மீட்டாங்குளம் மயானசாலைவசதி கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வல்லந்தை ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ளது மீட்டாங்குளம் கிராமம் இந்தகிராமத்தில் சுமார் 250 குடும்பங்களும் 500 பேர் வசிக்கின்றனர்

இங்கு உள்ள பொதுமயானத்திற்கு செல்லும் பாதையே இல்லாமல் கறுவலும் முற்களும் உள்ளதால் இறந்தவர்கள் உடலை தூக்கிசெல்வது பெரும் சிரமமாக உள்ளது சாலைவசதி செய்துதரவேண்டி ஊராட்சிமன்ற தலைவரிடம் இரண்டு ஆண்டாக மனுதந்தும் பயன்இல்லை

இன்றுவரை இதற்கு விடிவுகாலம் பிறக்கவில்லை வெளியூரில் இறந்து ஆம்புலன்ஸ்சில் கொண்டுவருபவர்கள் உடலை சுமந்து சுற்றிசெல்லவேண்டிய அவலநிலை உள்ளது

என கிராமமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர் ஆகையால் மீட்டாங்குளத்தில் மயானத்திற்கு செல்லும் சாலையை உடனடியாக முதல்வர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் வட்டாரவளர்ச்சி அலுவலர் அவர்களும் பொதுமக்கள் நலன்கருதி சீரமைத்து புதியசாலை அமைத்து தரவேண்டுமாய் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *