திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் கோவில்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து புளிக்கடை பேருந்து நிறுத்தம் வரை மிகவும் வளைவான தார் சாலை என்பதால் வேகத்தடை எச்சரிக்கை பதாகை இல்லாததால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.இப்பகுதியில் வேகத்தடை எச்சரிக்கை பதாகைகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.