தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க தலைவராக பொறியாளர் மெல்வின் செயலாளராக சையது பரூக் அப்துல்லா பொருளாளராக ரவி பாரத் மற்றும் சங்கத்திற்கு பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கான பதவி பொறுப்பை முன்னாள் மண்டல தலைவர் பொறியாளர் ரமேஷ்பாபு மற்றும் நந்தகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். இந்த விழாவில் முன்னாள் மாநில செயலாளர் குழந்தைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
கட்டுமான பொருள்களின் விலைவாசிகளை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.

கட்டுமானத்திற்கு அத்தியாவசியமான கட்டுமான பொருள்களான சிமெண்ட் கம்பி ஜல்லி எம் சாண்ட் போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்.

எம் சாண்ட் பி சாண்ட் ஜல்லி கற்கள் போன்றவைகள் ஒரு வருடத்தில் மூன்று முறை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதனால் பொறியாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீடு கட்டுபவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இந்த விலையைக் குறைக்க கலெக்டரிடம் மனு கொடுப்பது என்றும் கூடிய விரைவில் தொடர் வேலை நிறுத்தம் அறிவிப்பது என்றும்
தமிழக அரசு கட்டுமான பொறியாளர்களுக்கு பொறியாளர் கவுன்சில் அமைத்து பொறியாளர்களுக் கு தொழில் பாதுகாப்பு தர வேண்டும் உள்பட பல்வேறு திர்மானங்கள் ஒரு மனதாக அனைத்து சங்க நிர்வாகிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கட்டிட ப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் மோகன்ராம் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *