அமைச்சர்  வி.செந்தில்பாலாஜி மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், கரூர் மாவட்டத்தில் ரூ.138.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 3 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு…


மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக உட்கட்டமைப்பு பணிகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள் அந்த வகையில் கரூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவுத்திட்டமான திருச்சிராப்பள்ளி மாவட்டம் உன்னியூருக்கும் – கருர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவேரி ஆற்றின் குறுக்கே பணி-ரூ.92.38 கோடி மதிப்பீட்டில் உயர் மட்டபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பாலம் காட்டுப்புத்தார் உன்னியூர் சாலையில் துவங்கி, கரூர் நெரூர் சாலையில் முடிவடைகிறது. இப்பாலம் நீளம் 1092.00 மீட்டரும் மற்றும் அகலம் 12.90 மீட்டர் அளவில் கட்டப் படுகிறது.

இப்பாலம் 26 கண்களுடையதாய் 42 மீ. அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. தற்சம்யம் உன்னியூர், தொட்டியம், காட்டுப்புத்தூர் , வலையப்பட்டி மற்றும் அதை சார்ந்த கிராமம் எழுர்பட்டி, காடுவெட்டி, மணமேடு, கிராம மக்கள் கரூருக்கு செல்ல தற்சமயம் 10.00 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றில் உள்ள பாலத்திலோ அல்லது 10.00 கி.மீ. தொலைவில் காவேரி ஆற்றில் உள்ள மோகனூரில் உள்ள பாலத்திலோ சென்று வர வேண்டிய சுழ்நிலை உள்ளது.

மேலும் நெரூர் திருமுக்கூடலூர், சோமூர்,பஞ்சமாதேவி, முனியப்பனூர் கிராம மக்கள் 12.00 கி.மீ. தூரத்தில் உள்ள மோகனூரில் உள்ள பாலத்தின் வழியாக முசிறி தொட்டியம் சென்று வர வேண்டியுள்ளது. இப்பாலம் கட்டப்பட்டதால் 20.00 கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய சுழல் குறைகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக 90% கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சி – மண்டலம் -4 வரர்டு எண் – 48 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.5.93 கோடி மதிப்பீட்டில் 4.59 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்கா கட்டுமானப் பணிகளையும்,உட்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின் கீழ் மண்டலம் -4 வார்டு எண்: 36 திருமாநிலையூரில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் 12.14 ஏக்கர் பரப்பளவில் உணவு விடுதி,பொருட்கள் பாதுகாப்பு அறை,பயணியர் காத்திருப்பு அறை,தாய்மார்கள் பாலூட்டும் அறை,டிக்கெட் கவுண்டர்,காவல் துறை அறை, கடைகள், கழிப்பறைகள்,மழைநீர் வடிகால் , பேருந்துகள் நிறுத்துமிடம் ,ஏ.டி.எம் மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் என மொத்தம் ரூ.138.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

இப்பணிகள் அனைத்தும் தரமாகவும், விரைவாகவும் முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக விரைவில் திறந்து வைக்க உள்ளார்களென மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இ.கா.ப., கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, நெடுஞ்சாலைத்தறை கோட்டப் பொறியாளர் முருகானந்தம், உதவி கோட்டப் பொறியாளர் கோமதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *