திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகுமார் மகன் தர்ஷன்(13). இவர் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த சித்திரை தேரோட்த்திற்கு தனது குடும்பத்தினருடன் சிறுவன் தர்ஷன் வந்துள்ளார்.அப்போது சாமி தரிசனம் செய்ய நொச்சியம் பகுதி உள்ள கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே நடைபயணம் மேற்கொண்டு ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று தர்ஷன் தேரை தரிசனம் செய்து மீண்டும் நொச்சியத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்தபோது மாணவன் தர்ஷன் தந்தையிடம் ஆற்றில் குளிக்க வேண்டும் என கேட்டுளார்.

பின் ஆற்றில் இறங்கிய தர்ஷன் குளித்தப்போது அங்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிக்காக ஆற்றில் தோண்டப்பட்ட பள்ளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற தர்ஷன் தண்ணீரில் மூழ்கினர்.

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் கிராம இளைஞர்கள் ஓடி வந்து கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர். சிறிது நேரத்தில் மயக்க நிலையில் தர்ஷனை மீட்ட இளைஞர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைகேட்ட பெற்றோர் தர்சனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று தர்ஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் சிறுவன் உயிரிழப்பிற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் பணி நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை மற்றும் திருவிழா நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பிற்கு போலீசாரும் வரவில்லை எனக்கூறி 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாஜக திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் திருச்சி நாமக்கல் சாலையில் நொச்சியம் நான்கு ரோடு சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலால் திருச்சி நாமக்கல் மற்றும் நாமக்கல் திருச்சி, துறையூர் திருச்சி மற்றும் திருச்சி மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *