தேனியில் என் .ஆர். தியாகராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி எம்பி. தேனி என்.ஆர்.டி. ரோடு என் ஆர் டி நகரில் அமைந்துள்ள என்.ஆர். தியாகராஜன் நினைவாலயத்தில் நடைபெற்ற தேனியின் சிற்பி நவீன தேனியின் தந்தை என் ஆர் டி ன். அபாரத உழைப்பின் சின்னமாக தேனி நகரம் விளங்கி வருகிறது
இவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் நகர திமுக செயலாளர் எம் சி நாராயண பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன் மதிமுக மாவட்ட செயலாளர் வி.எஸ் .கே. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்