மணலிபுதுநகர் அடுத்த விச்சூர் – செம்பியம் மணலி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 18, தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்தார். நேற்று மதியம், தனது நண்பர்கள், எபினேஷ், பிரியான் ஆகியோருடன் சேர்ந்து, செம்பியம் மணலி ஏரியில் குளிக்க சென்றனர்.
குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது, யுவராஜ், ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி செல்லும் போது, திடீரென நீந்த முடியாமல் மூழ்கியுள்ளார். இது குறித்து நண்பர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஊர் மக்கள் மூழ்கிய வாலிபரை மீட்டனர். இருப்பினும், யுவராஜ் மூச்சு திணறி உயிரிழந்தார். மணலிபுதுநகர் போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.