அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம் & பூஜைகள்:

சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மக்களுக்கான மக்கள் இயக்கம் நடத்திய சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றது.

மேலும் இந்த மாபெரும் யாகம் மற்றும் பூஜைகள் நாட்டில் ஆன்மீக தழைக்கவும் , 10 ஆம்,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ,மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் அனைவரும் தேர்ச்சி பெறவும் , வருங்காலத்தில் வரக்கூடிய இயற்கை சீற்றங்களை தடுக்கவும் , மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நலமுடன் வாழவும் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மக்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் தலைவர் யந்திராளய தேவி திரிபுரசுந்தரி உபாசகர் யந்திராளய நாணல் குருஜி சக்தி ஸ்ரீ வீரமணி சாமிகள் தலைமை வகித்தார்.டாக்டர் சுதா சேஷயன் அவர்கள், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அருள்வேலன் ஜி அவர்கள் மற்றும் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாஸ்கரன் ஜி , ஜோதிடர்.சேலம் ரமேஷ் ஜி , திருமதி.ஜெயா ஜி மற்றும் ஸ்ரீதர் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினர்.

மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்தார்.மக்களுக்கான மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் (ம) அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணை செயலாளர் டாக்டர்.திரு.கார்த்திக் கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் பொறுப்பாளர்கள் உடன் இணைந்து ஆன்மீக பெருவிழாவை மிக சிறப்பாக செய்திருந்தனர்.


இந்த விழாவில் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மற்றும் பல்லாவரம் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் விழாவில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் , பஜனைகள் , விளக்கு பூஜை போன்றவை நடந்தது.மேலும் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *