தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் 36-ஆம் ஆண்டு விழா.
3000 க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில்
தமிழ்நாடு கட்டுமானஉடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் 36-ஆம் ஆண்டு விழா மற்றும் மே தின இருபது அம்ச கவன ஈர்ப்பு மாபெரும் கோரிக்கை பேரணிமற்றும் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வி.ஜே. குமார் தலைமை தாங்கினார்.
மாநிலத் தலைவர் வரவேற்புரை எம்.எல்.ராஜசேகர் மாநில பொதுச் செயலாளர்
ஏ.ஜான் விஜயகுமார் முன்னிலை கே .இ. கண்ணன் மாநில துணைத்தலைவர் ஜி.பழனியாச்சாரி மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். அர்ஜுனன் மாநில செயற்குழு தலைவர் அய்யனாரப்பன் மாநில துணை செயலாளர்
கே. வெங்கடேசன் மாநில துணை செயலாளர் அபிராமி ராமு சங்க ஆலோசகர் மாநில பேரணியை துவக்கி வைப்பவர்கள் எம்.சுப்பு மூத்த தொழிற்சங்க தலைவர் பொதுச் செயலாளர் மாநில கட்டிட தொழிலாளர் சங்கம்ஏ.கதிர்வேல் மாநில தலைவர் தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்புமே தின சிறப்புரை நீதி அரசர் திருமிகு எஸ்.கே. கிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றம் ஆர். கிருஷ்ணகுமார் செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்க.தேசிங் மூத்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம் நிறுவனத் தலைவர் கட்டிட தொழிலாளர் சங்கம் தங்க பெரு தமிழ் அமுதன் சிறப்புரை யாற்றின.
மாநாட்டில் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று தனி அமைச்சகம் துறையை உருவாக்க நல வாரியங்களுக்கு வாரிய தலைவர் வாரிய உறுப்பினர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு வாக்குரிமை வழங்கி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் அமைப்புசாரா 16 நல வாரியத்திற்கும் ஒரு பர்சன்ட் லெவில் வசூல் செய்ய வேண்டும்,
நலவாரிய பதிவிற்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளிக்கு இ எஸ் ஐ திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், நலவாரியத்தில் வழங்கப்படும்
ஓய்வூதியம் 5000 உயர்த்தி வழங்கிட வேண்டும்,நல வாரியத்தில் பதிவு செய்ய இடைத்தரகர்களின் முறைகேடுகளை தடுக்க தொழிற்சங்க பதிவு எண் மூலம் தனி அடையாள அட்டை வழங்கிட வேண்டும்,
40 மாவட்ட நலவாரிய அலுவலத்திலும் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான செயல் திட்டங்களை செயல்படுத்தஏ சி எல் அவர்களுக்கு தெளிவுரை வழங்கிட வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கிட வேண்டும், மணல் கொள்ளையை கட்டுப்படுத்த மணல் குவாரியை திறந்து அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வைக்க வேண்டும்மற்றும் தொடர்ந்து இருபது கோரிக்கைகள் வைக்கப்பட்டது.மேலும் கூட்டத்தில் செங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் புதுப்பட்டு பி.கங்காதரன் நன்றியுரை வழங்கினார்.