சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பாடி பில்டர்ஸ் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்களை வென்ற, புதுச்சேரி இளைஞருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்துக்களை தெரிவித்தார்

வேர்ல்ட் ஃபிட்னஸ் ஃபெடரேஷன்” சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் sub junior பிரிவில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி வெளிநாடு சேர்ந்த ரோகித் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிகாட்டி தமிழ்நாடு அளவில் இரண்டாம் இட த்தில் வெற்றி பெற்றார்.

இதே போன்று கடந்த 4-ம் தேதி புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற புதுச்சேரி அளவிலான “வேர்ல்ட் ஃபிட்னஸ் ஃபெடரேஷன்” பாடி பில்டர் போட்டியிலும் மூன்றாம் இடத்தை பிடித்து இரண்டு பதக்கங்களை வென்றார்.

புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த ரோகித்துக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார், பாடி பில்டர்ஸ் போட்டியில் தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்று ரோகித்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் சால்வைகள் அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது வில்லியனூர் பிளாக் ஜிம் பயிற்சியாளர் அரிவரசன் உடன் இருந்தார்.

முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை தலைவர் செல்வம் வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் ஆகியோரையும் நேரில் சந்தித்து ரோகித் வாழ்த்துக்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *