மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது உதய நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில மறுமலர்ச்சி திமுக வின் சார்பில், மாநில கழக அமைப்பாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களால் கழக கொடி பிடித்து மாபெரும் இருசக்கர வாகன பேரணி, கழக கொடியேற்றம், அறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் கழக நிர்வாகிகளால் உடல் உறுப்பு தானம், கண்தானம் மற்றும் அன்னதானம் நடத்தப் பெற்றது.
இவ்விழாவிற்கு மறுமலர்ச்சி திமுகவின் தலைமைக் கழகத்தில் இருந்து மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு. கி. வெங்கடேசன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் வருகை தந்திருந்தனர். இவ்விழாவில் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் திரு. ஹேமா க பாண்டுரங்கம் அவர்கள், அவைத் தலைவர். செல்வராஜ், துணைச் செயலாளர் வி. கலைவாணன் & துணைவியார், மூர்த்தி போன்றோர் உடல் தானத்த்துக்கான விண்ணப்பத்தை ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களிடம் சமர்ப்பித்தனர்.
முன்னதாக, விழாவின் சிறப்பு அழைப்பாளர் ஆவடி இரா. அந்திரிதாஸ் அவர்களின் வீர உரை நடைபெற்றது.இறுதியாக, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் கி. வெங்கடேசன் அவர்கள் திருக் கரங்களால் ஏழை எளிய மக்களுக்கு, தாய் குலத்திற்கு, தொழிலாளர்களுக்கு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.
இவ்விழாவினை உருளையன் பேட்டை தொகுதி செயலாளர் திரு. சதீஷ் என்கிற சக்திவேல் சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்து இருந்தார். மேலும்,
இந்நிகழ்வில் கழக அமைப்பாளர் அவர்களுடன்,அவைத் தலைவர் – செல்வராஜ், துணை செயலாளர் – வி. கலைவாணன், மூர்த்தி.முன்னாள் பொறுப்புக்குழு தலைவர் – கபிரியேல்,தலைமை செயற்குழு உறுப்பினர் – பா.இளங்கோ,பொதுக்குழு உறுப்பினர் – செல்லத்துரை, மாசிலாமணி,மகளிர் அணி – திருமதி.செல்வி.மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் – வேதா வேணுகோபால்,உழவர்கரை தொகுதி செயலாளர் – நீ.சந்திரன்,திருபுவனை தொகுதி செயலாளர் – பா. கந்தன்,உசுடு தொகுதி செயலாளர் – ச. சரத் குமார்,வில்லியனூர் தொகுதி செயலாளர் – ரா. கோபிநாத்,இந்திரா நகர் தொகுதி செயலாளர் – சீ. சீராபதி மூத்த உறுப்பினர் – செந்தில் குமார், பரசுராமன்
புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி இணையதள அணி பொறுப்பாளர் – கரிகாலன் குழந்தைவேலு போன்றோர் உடன் இருந்தனர்.