ஊட்டியில் நாளை நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க புதுவையைச் சேர்ந்த 75 மாணவ மாணவிகள் இன்று புறப்பட்டனர். மணி பாலகிருஷ்ணன் தமிழர் வீர விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்ற இந்த மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் இன்று நடந்தது.

போட்டியில் பங்கேற்கச் இரண்டு பேருந்துகளில் சென்ற மாணவ மாணவிகளுக்கு பேருந்து கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக சமூக சேவகர் டாக்டர். சலீம்பாஷா, சமூக சேவகி பச்சைவாழியம்மன் ஆகியோர் நிதி வழங்கி சிலம்பம் விளையாட்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி எம்எல்ஏ, முதலியார்பேட்டை கருணா என்கிற மனோகரன், ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அளவில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கடந்தாண்டை போல் இந்த ஆண்டும் வெற்றி பெற்று புதுவைக்கு புகழ் சேர்க்குமாறு வாழ்த்தி பேசினார்.
தேசிய அளவில் நடைபெறும் இந்த சிலம்பம் போட்டியில் புதுவையைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்கள் மணி பாலகிருஷ்ணன் தமிழர் வீர விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்த விளையாட்டு வீரர்களுடன் முதன்மை சிலம்பு பயிற்சியாளர் சங்கர் மற்றும் பயிற்சியாளர்கள் உடன் செல்கின்றனர். மேலும் இந்த வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் பாஸ்கர், அருள், விக்ரமாதித்தன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.