புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி 8 வது கிளை தலைவர் கண்ணதாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு 500 குடும்பங்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடினார்

நெல்லித்தோப்பு தொகுதி 17/8 பூத் கிளை தலைவர் கண்ணதாசன் இன்று தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினார
இதனை ஒட்டி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசாமி தோட்டம், பகுதியில் பாஜக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பாஜகவில் மாநில பொது செயலாளர் மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அப்பொழுது விழாவில் கலந்து கொண்ட தூய்மை பணியாளரை வைத்து பாஜகவின் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதை அடுத்து நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட ராஜ ஐயர் தோட்டம், கிருஷ்ணசாமி தோட்டம், கண்ணையர் வீதி, உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கண்ணதாசன் தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நகர மாவட்ட மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் நகர மாவட்ட முன்னாள் தலைவர் உமாபதி துணை தலைவர் சண்முகம் மற்றும் இளைஞர் அணி விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமான பாஜக பிரமுகர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் கொண்டாடிய கண்ணதாசன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் இளங்கோ வழிகாட்டுதல்படி பாஜகவில் இணைந்தார்.அப்போதிருந்து கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் பணிகளை திறம்பட செய்து வருகிறார் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மருத்துவ உதவி தொகை வழங்குவது, மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குவது, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்குவது மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க நிதி உதவி பெற்று தருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொகுதி முழுவதும் சுமார் 12 ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இவரது சேவையை கட்சி மேலிடமும் கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் பாராட்டி உள்ளனர் இந்த நிலையில் இவருடைய மக்கள் சேவையை பாராட்டி கண்ணதாசனுக்கு பாரத ரத்னா விருதும் பெருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.