கோயம்புத்தூர்,
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கோவை ஓ பை தமராவில் உள்ள ஓ கஃபேவில், ஒரு சுவையான மதிய உணவோடு சிறப்பாகக் கொண்டாடுங்கள். மே 11, 2025 ஞாயிற்றுக்கிழமை, தாய்மையின் அரவணைப்பு, அன்பு மற்றும் உணர்வைக் கொண்டாடும் ஒரு சிறப்பு மதிய உணவு பஃபே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாலடுகள், சுவையான பிரதான உணவுகள் மற்றும் இனிப்பு வகைகள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து உள்ள பிரபலமான உணவு வகைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பஃபேவுடன் மனதைத் தொடும் உணவு அனுபவத்தில் பெறலாம். அப்பம், சாட், பாஸ்தா மற்றும் தோசை போன்ற விருப்பமான உணவுகளை வழங்கும் பல்வேறு நேரடி கவுண்டர்களும் இடம்பெற்று இருக்கும்.
இந்த நிகழ்வின் அழகை அதிகரிக்கும் வகையில், சிறப்பு அன்னையர் தின கருப்பொருளுடன் பஃபே வழங்கப்படும். அனைத்து தாய்மார்களும் மாக்டெயில் மூலம் வரவேற்கப்படுவார்கள், மேலும் தங்கள் குழந்தைகளுடன் உணவருந்தி பஃபேவைத் தேர்வு செய்பவர்களுக்கு, தி எலிவேஷன் ஸ்பாவில் உணவருந்துவதில் 20% தள்ளுபடியும் ஸ்பாவில் 25% தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்.
பெரியவர்களுக்கு பஃபே ரூ.1,399 + ஜிஸ்டி மற்றும் 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ரூ. 899 + ஜிஸ்டி என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவிற்கு – +91 80 65551226