தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் .பாராளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன், அறிக்கை வெளியிட்டதாவது;…..
தமிழக அரசு, விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் தொடர்ந்து முறையாக, சரியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் SPCA (Society for the Prevention of Cruelty to Animals) – விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதல் முறையாக தஞ்சாவூரில் தான் SPCA-க்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டது.
இந்த சங்கத்தின் (SPCA) மூலம் விலங்குகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக விலங்குகளின் மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி, ஒட்டுண்ணி தடுப்பு போன்ற பணிகள் இதில் அடங்கும்.மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விலங்கு வதை தடுப்புச் சங்கம் (SPCA) மற்றும் மிருக வதை நிவாரண சங்கம் ஆகியவை விலங்குகள் நலனுக்காக செயல்படும் மிக முக்கிய அமைப்புகளாகும்.அதாவது விலங்குகள் மீதான கொடுமைகளைத் தடுப்பதிலும், அவற்றுக்கு நிவாரணம் அளிப்பதிலும் இவ்விரு சங்கங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில் இந்த சங்கத்தை பொது மக்கள் பாராட்டுகின்றனர்.
இந்த சங்கம் பல ஆண்டுகளாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வருகின்றன.
சமீபத்தில் கூட ஒரு விலங்கு கருத்தடை மையம் (Animal birth control centre) நிறுவப்பட்டு அதன் மூலம் பல்வேறு மிருக ஜீவன்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) மற்றும் மிருக வதை நிவாரண சங்கம் ஆகியவற்றிற்கு நன்கொடையாக பல்வேறு சொத்துக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை முறையாக அரசு தரப்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாதுகாக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஒரு உத்திரவும் பெறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அந்த SPCA சொத்துக்களின் மதிப்பு மிகவும் அதிகம். எனவே தஞ்சாவூர் மாவட்ட மக்களின் நலன் கருதி, இந்த சொத்துக்கள் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அந்த சொத்துக்கள் பயன்படுத்தப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து அந்த சொத்துக்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் சங்கத்திற்கு பாத்தியப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
எனவே தமிழக அரசு, பொது மக்கள் மற்றும் விலங்குகள் நலன் கருதி விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) மற்றும் மிருக வதை நிவாரண சங்கம் வைத்துள்ள நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கும் விரைவில் முடிவுறவும், விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) மற்றும் மிருக வதை நிவாரண சங்கம் தொடர்ந்து செயல்படவும் தமிழக அரசு உதவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறன்