பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுக்கைப் புதுத் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் புண்ணியமூர்த்தி இவரது மனைவி தமிழ்செல்வி இவர்களது 2 வது மகள் ஆர்த்திகா (17 வயது) பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்+2 படித்து வந்த இவர் நடந்து முடிந்த அரசுப் பொதுத் தேர்வை எழுதியிருந்தார்.
தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்துடன் இருந்தவர் தேர்வு முடிவுகள் வருவதற்கு முந்தைய நாளில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று வெளியான+2 தேர்வு முடிவுகளின் படி இவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவரது வீட்டிற்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச்
ஜவாஹிருல்லா சென்று பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.