வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் 71 வருவாய் கிராமங்களுக்கு திருவாரூர் ஆர் டி ஒ‌ செளமியா தலைமையில் சுழற்சி முறையில் மூன்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா அலுவலகத்தில் தாலுக்காவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் உள்ளது. 1434- ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி, திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் செளமியா தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்நிலையில் முதல் நாளான 6- ஆம் தேதி ஆவூர் உள்வட்டத்தை சேர்ந்த அன்னுகுடி, உத்தமதானபுரம் உள்ளிட்ட 31 வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்றது. அதனை அடுத்து 7- ஆம் தேதி வலங்கைமான் உள் வட்டத்திற்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், ஆதிச்சமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்களுக்கும், 8- ஆம் தேதியான நேற்று ஆலங்குடி உள் வட்டத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம், பெருங்குடி, மாணிக்கம்கலம், கொட்டையூர் உள்ளிட்ட 21 வருவாய் கிராமங்களுக்கும் நடைபெற்றது.‌

வலங்கைமான் தாலுக்காவில் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது நீண்ட கால கோரிக்கைகள், நலத் திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை, சமூகப் பாதுகாப்பு திட்டத்தால் வழங்கப்படும் அனைத்து வகை உதவி தொகைகள், பட்டா கோருதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்டவைகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெயபாஸ்கர், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் மகேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *