காஞ்சிபுரம்
ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சங்கம் சார்பாக அழகு கலை இலவச பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

ரோட்டரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சங்கமும், வி ஷைன் பிளஸ் பியூட்டிபார்லர் மேக் அப் கோர்ஸ் இணைந்து வழங்கும் இலவச பியூட்டி பார்லர் மற்றும் மேக்கப் பயிற்சி முகாம் கடந்த 30 நாட்கள் நடைபெற்று வந்தது.
பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில் காஞ்சிபுரம் மாமல்லர் நகர் அருகே உள்ள சண்முக நகர் ரோட்டரி சென்டரில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் பி. பரணிதரன் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் ரோட்டரி சங்கத்தின் லெதர் பேக் ஆகியவற்றை வழங்கி சிறப்பு உரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் எம். சீனிவாசன், 2025-26 ஆம் ஆண்டின் தலைவர் ஸ்டீபன், முன்னாள் ஆளுநர் பரணிதரன் அவர்களின் மனைவி மகாலட்சுமி பரணிதரன், பயிற்சி இயக்குனர் ஜி. விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பேராசிரியர், பல் மருத்துவர் டாக்டர் பி.சதீஷ்குமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள்