சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் தொகுதி மண்டலம் 2ல் உள்ள 20வது வார்டு மணலி பெரியதோப்பு ஸ்ரீ கன்னியம்மன்-முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா

சென்னை மணலி பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் சார்பாக 150ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரர் திருக்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது கோவில் கும்பாபிஷேகம் விழாவில் மணலி மண்டல குழு தலைவர் ஏ. வி ஆறுமுகம்M.C அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கன்னியம்னுக்கு மகா மண்டபம் அமைத்து கொடுத்தார்

அவர்களுக்கு பெரியதோப்பு கிராம வ.உ.சி. பொதுநல டிரஸ்ட் நிர்வாகிகள் சார்பாக முதல் பூரன கும்பமாரியதை வழங்கபட்டது தலைவர் கோ. ராமமூர்த்தி, செயலாளர் ஏ.டில்லிபாபு, பொருலாளர் டி.சுரேஷ், துணைத்தலைவர்கள் மா.ராஜேந்திரன், கு.ரவிக்குமார், துணை செயலாளர்கள் கோ.சீனிவாசன், மு.பரமசிவம், இணை செயலாளர்கள் ஆ.முருகன் மா.கோபிநாத், எம்.எஸ்.ராஜேஷ்குமார் மற்றும் முன்னால் நிர்வாகிகள் கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விக்னேஷ்வரபூஜை, கோபூஜை, தனபூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகம் ஹோமம், பூர்ணாஹீதி, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், துவாரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, சுவாஸினி பூஜை, பிம்பசுத்தி, முதல் இரண்டு கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் கலசங்களை மேளதாளத்துடன் கொண்டுவந்து விமானம் மற்றும் மூலவர்கள் ஸ்ரீ கன்னியம்மன் -முனீஸ்வரர் தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதணைத்தொடர்ந்து பக்தர்கள் புனிதநீர் தெளித்தனர்.

பின்னர் மூலவர்களுக்கு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தூபதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இத்திருவிழாவிற்கு சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பக்தர்களுக்கு பகல் 12:00 மணி அளவில் பெரியதோப்பு கன்னியம்மன் கோவில் நண்பர்கள் சார்பாக மாபெரும் அருச்சுவ உணவு அன்னதானம் நடைபெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *