திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
மாப்பிள்ளை சாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழாவில் சிறுமி ஒருவர் தேருக்கு அசாத்தியமாக முட்டுக்கட்டை போட்டார்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திரு வீழி மிழலை கிராமத்தில் மாப்பிள்ளை சாமி எனப்படும் திரு வீழி மிழலை சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணம், மாப்பிள்ளை சாமி படி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடந்து முடிந்து முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது இந்த தேரோட்டத்தின் பொழுது சிறுமி ஒருவர் தேருக்கு அசாத்திய திறமையுடன் முடடுக்கட்டை போட்டு தேர் நிலையை அடையும் முறை பணியாற்றியதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பத்தார்கள் அந்த பணியை மேற்கொள்வதால் அந்த சிறுமியும் அந்த பணியை அசாத்திய திறமையுடன் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றார்கள்