பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே இரும்புதலை ஸ்ரீதிருலோகநாத சுவாமி திருலோகநாயகிஅம்பாள் ஆலயம் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா திரளான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இரும்புதலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திருலோக நாயகி உடனுறை ஶ்ரீ திருலோகநாத சுவாமி ஆலயம் சித்ரா பௌர்ணமி 101 வது ஆண்டு விழாவை முன்னிட்டு காலை வெண்ணாற்றில் இருந்து சுவாமி திருலோகநாதர் அம்பாள் திருலோகநாயகி உடன் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மேள. தாளங்கள், இசை வாத்தியங்கள் முழங்க குதிரைகள் நடனமாட, பட்டத்து யானை, அணிவகுக்க சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் உடன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது
இரவு இன்னிசை நிகழ்ச்சியும் வான வேடிக்கையுடன் சுவாமி திருலோகநாயகி மற்றும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது திருவிழாவிற்கான ஏற்பாடுகளை துரைபிள்ளை குடும்பத்தினர்கள் மற்றும் விழா குழுவினர், இரும்புதலை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.