தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டு தணிக்கை செய்யும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்தொடங்கி வைத்தார்

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் கூட்டு தணிக்கை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று தொடங்கி வைத்து,பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தாவது,

அனைத்து பள்ளி வாகனங்களும் வருடத்திற்கு ஒருமுறை அனுமதிச் சீட்டில் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி செயல்படுவதை உறுதி செய்திட வருவாய் கோட்டாட்சியர் / சார் அலுவலர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், உறுப்பினர் மற்றும் செயலாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர், இயக்க ஊர்தி ஆய்வாளர் ஆகியோர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான பல்துறை குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.

இக்குழுவினரால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிபெற்று இயங்கும் கடலூரில் 239 வாகனங்களும், பண்ருட்டியில் 119 வாகனங்களும், நெய்வேலியில் 30 வாகனங்களும், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிபெற்று இயங்கும் சிதம்பரத்தில் 391 வாகனங்களும், விருத்தாசலத்தில் 502 61601 மொத்தம் 1,281 வாகனங்கள் ஆய்வுசெய்ய உட்படுத்தப்பட்ட்டுகிறது.

இவ்வாகனங்களில் அவசரவழி கால கதவு, முதலுதவி பெட்டகம், முன்,பின் சென்சார் கேமரா, மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்ட 18 அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியும்பட்சத்தில் தகுதி சான்று ரத்து செய்யப்படும்.

இக்கூட்டு தணிக்கை ஆய்வில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களின் நலன் கருதி சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் வாகன ஓட்டுநர்களின் பார்வை திறனை பரிசோதித்து, அவர்களுக்கு தேவையான கண் சார்ந்த மருத்துவ உதவிகள் வழங்கிடுகிறது. மேலும், பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகும் போது வாகனங்களில் தீ ஏற்படும் பட்சத்தில் மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி எவ்வாறு தணிப்பது மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகையில் முதலுதவி செய்வது குறித்தும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினரால் செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவரசிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இவ் ஆய்வில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (கடலூர் மற்றும் சிதம்பரம்) செல்வம்,உதவி மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை விஜயகுமார், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன் குமார்.வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பிரான்சிஸ் (நெய்வேலி), ஆனந்தன் (கடலூர்), ரவிச்சந்திரன் (சிதம்பரம்). பெரியசாமி (விருத்தாச்சலம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *