பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் பிரசித்திப்பெற்ற பாலைவனநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்அருகே திருப்பாலைத்துறையில் எழுந்தருளியுள்ள பிரசித்திப்பெற்ற. பாலைவன நாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது .
இதில் வரலாற்று சிறப்புமிக்க தவள வெண்ணகையால் பாலைவனநாதர் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் பூஜைகள் செய்து சண்ட மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் தேரில் எழுந்தருளி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு
பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.அதனைத் தொடர்ந்து பாலைவன நாதர் தேரில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திரைப்படம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
விழாவில் ஏற்பாடுகளை திருப்பாலைத்துறை சிவப்பேரவை நண்பர்கள் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.