பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கத்தின் தலைமையில் நடத்தப்படும் வன்னிய இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொண்ட பெரியளவான பேரணி இன்று புறப்பட்டது.
இந்த பேரணிக்கு பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையிலான குழுவினர் தலைமை வகித்தனர். வாகனங்களில் ஜெயங்கொண்டம் பாமக நகர செயலாளர் பரசுராமன், முன்னாள் நகர செயலாளர் மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் வன்னிய இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட இவர்கள், வன்னிய இளைஞர்களின் ஒருங்கிணைப்பு, முன்னேற்றம் மற்றும் சமூக நலனுக்காகவும், வன்னியரின் பாரம்பரிய பெருமையை எடுத்துக்காட்டுவகவும் விழாவில் பங்கேற்கும் நோக்கத்துடன் புறப்பட்டனர்.
இந்த வாகனப் பேரணியில் பங்கேற்றவர்கள் மாமல்லபுரம் வரை ஊர்வலமாக சென்று, பெருவிழாவில் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வு, வன்னிய சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வெளிக்கொணரும் முக்கியமான நிகழ்வாகும்.