தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணமஅருகே உள்ள நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் தேவாரம் பாடல் பெற்ற திருநாவுக்கரசு நாயனார் அவர்களின் குருபூஜை முன்னிட்டு மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல்வளர்ச்சி அறக்கட்டளை ,அமுதன் விளம்பர நிறுவனம் ஆகிய இணைந்து நடத்தும் நேற்று திருநங்கை பரதத் கலைஞர் ராஜகுமாரி தலைமையில் 1000 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவாடுதுறை ஆதீனம் கட்டளை வேலப்ப தம்பிரான்,துலாவூர் ஆதீனம் இளவல்,திருநெல்வேலி உமையொரு பாகின் தம்பிரான்,நாச்சியார் கோவில் இளவரசர், கூனம்பட்டி இளவல், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

கோவில் வளாகத்தில் சுற்றியுள்ள திறந்தவெளி அரங்கு அமைக்கப்பட்டது. இதில், கும்பகோணம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 குழுக்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

சிறுமிகள் முதல் பெரியவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு கலைஞருக்கும் அடையாள எண் வழங்கப்பட்டது.
இதன்படி வரிசையாக நிறுத்தப்பட்டு, நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மொத்தம் 3 பாடல்கள் பாடப்பட்டன.
இந்நிகழ்ச்சியைக் காண ஆயிர த்துக்கும் அதிகமானோர் திரண்டு ரசித்தனர்.பின்னர், நடனம் ஆடிய மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *