அருங்குணம் ஊராட்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா.
எம்.எல்.ஏ.மரகதம் குமரவேல் கேக் வெட்டி கொண்டாடினார்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அருங்குணம் ஊராட்சியில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா எது விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ் பாபு தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் முதுகரை கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
எம்.எல்.ஏ. மரகதம்குமரவேல் கலந்துகொண்டு சிறுவர் சிறுமையுடன் மகிழ்ந்து
கழக பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கேக்கினை வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட், அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஏழை எளியவர்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.