செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருமண கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி தரும் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
அச்சிறுபாக்கம் புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்றான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் சைவ சமய குரவர்கள் நால்வரால் பாடல்பெற்ற தலமான விளங்குகிறது
இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மே 1 ல் தொடங்கியது.
பின்பு மே 3ல் அதிகார நந்தி சேவை, திருமுலைப்பால் உற்சவம் 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது.
மே 7 ல் திருத்தேர் உற்சவம் நடந்தது பின்பு மே 9 ல் பிட்சாடனார்
உற்சவம் நடந்தது முக்கிய நிகழ்வாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரப்பெடு பகுதியில் திருமண கோலத்தில் உள்ள இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரரை பெரும்பேர்கண்டிகை மலை மீது உள்ள சூரசம்கார முருகப் பெருமான் மூன்று முறை வலம் வந்து.தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள அகத்திய முனிவருக்கு காட்சியருள அழைத்துச் செல்லும் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது திருக்கோயில் மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.