திருவாரூர் செய்தியாளர் வேலை செந்தில்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தின் குரு பெயர்ச்சி விழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.


ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்சசி அடைந்தார்.. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத்தலமாக விளங்கி வரும் இந்த ஆலயத்தில்.. ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம் .


இந்த ஆண்டு குரு பெயர்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.19 மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதனை முன்னிட்டு பரிகார ஹோமங்கள் நடைபெற்றது..


குரு பெயர்ச்சி முன்னிட்டு குருபகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.. தொடர்ந்து குரு பகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.முன்னதாக சந்தனம், தயிர், மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பரிகாரம் செய்யக்கூடிய ராசிகளான மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் பரிகார பூஜையில் ஈடுபட்டனர்.
குரு பெயர்ச்சி விழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *