குடவாசல் அரசு மருத்துவமனையில் முழு நேர மருத்துவர்களை நியமிக்கக்கோரி மா.கம்யூனிஸ்ட் கட்சியின் முற்றுகை போராட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையினையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். காலியாக உள்ள பல்நோக்கு மருத்துவ உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஸ்டாலின் தலைமையில் திருவாரூர் மருத்துவ சுகாதார அலுவலர் துறை இணை இயக்குநர் திலகம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இன்று முதல் இரவு மருத்துவர் பணியில் இருந்து செயல்படுவார்.
மேலும் ஒரு வார காலத்தில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடம் நியமிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்டதால் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.