கோவை
பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் போலி சமூகநீதி பேசிக்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தை கூறி திசை திருப்பி வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் தெரிவித்துள்ளார்…..
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,’தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக நாடாளுமன்ற வார்டு மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் திமுக அரசில் உள்ளது. முதல்வர்தான் அரசை நடத்துகிறாரா ? தம்பிகள் தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் நிலை உள்ளது.
இந்த தோல்விகளை மறைப்பதற்காக மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார் ஏற்கனவே பீஹார் தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், இங்கு போலி சமூகநீதி பேசிக்கொண்டு ஸ்டாலின் அவர்கள் மறுசீரமைப்பு விவகாரத்தில் இல்லாத விஷயத்தில் திசை திருப்பி வருவதாக தெரிவித்தார்…
காவல்துறை அதிகாரிகளுக்கான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் அது அவர்களது கடமை. அதேபோல அவரவரின் கருத்துக்களை சொல்வது என்பது அடிப்படை உரிமையாகும்.
திமுக அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளதாகவும் அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் ஆகிய நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும்.தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை இங்கு நடத்துவது தான் சரியானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.