மதுரையில் பணியின் போது கவனக்குறைவாக மண் அள்ளும் ஜே.சி.பி. இயந்திரத்தின் சக்கரம் ஏறியதில் சூப்பர்வைசர் கருப்புசாமி 28, பரிநதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார்.
மதுரை ஆவின் பாலகம் மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது இங்கு விருது நகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத் தைச் சேர்ந்த கருப்புசாமி 28, சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாதவர்.
பணியின்போது வெயிலின் தாக்கத்தால் மண் அள் ளும் இயந்திரத்தின்கீழ் அமர்ந்து அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதை கவனிக்காத வட மாநிலத்தை சேர்ந்த ஆப்பரேட்டர் ரகு மான், வாகனத்தை இயக் கினார்.அப் போது அருகே திருமண அரங்கில் இருந்தவர் கள் ‘ஒருவர் உட்கார்ந்திருக்கிறார்’ என கூச்சலிட்டனர்.
திருமண நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பாடல் சத்தத்தால் ரகுமானுக்கும், கருப்புசாமிக்கும் கூச்சலிட்டது கேட்கவில்லை. மண் அள்ளும் ஜே. சி. பி. இயந்திரம் ஏறியதில் கருப்புசாமி தலை நசுங்கி உயிரிழப்பு இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய ரகுமான், தெப்பக்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.