அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் கிழக்கு வலசல் பங்காளிகளுக்கு பூர்விக பாத்தியப்பட்ட ஸ்ரீஅன்னகாமு கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இரண்டு கால யாக பூஜைகள் நடந்தது. இதில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட மேல தாளம் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுவாமிக்கு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆதனூர் கிழக்கு வலசல் பங்காளிகள் செய்திருந்தனர்.