தமிழகத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோராக ரேயா டைமண்ட்ஸ் கோவையில் துவக்கம்

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் லேப்-கிரோன் வைர நகை பிராண்ட் ஆன ரேயா டைமண்ட்ஸ், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது புதிய விற்பனை மையத்தை துவங்கியது இதற்கான துவக்க விழாவில், கேபிஆர் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர், கே.பி. ராமசாமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஸ்டோரை திறந்து வைத்தார் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் விசாலாமான இடத்தில் ரம்மியமான சூழலில் விற்பனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது..

லாப் டயமண்ட்ஸ் பல்வேறு வகையான ஆபரணங்கள் அழகான முறையில் காட்சிபடுத்தப்பட்டு அவரவர்கள் விரும்பும் டிசைன்களை எளிதாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் ரேயா டயமண்ட்ஸ் ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது..

இது குறித்து ரேயா டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரபஞ்ச் எஸ் கே கோட்டா கூறுகையில், கோயம்புத்தூர் ஸ்டோர், ரேயாவின் பிரபலமான ‘ஐல்’ (தனிப்பயன் நிச்சயதார்த்த மோதிரங்கள்) மற்றும் ‘ஃப்ளேம்ஸ்’ (ரோஸ் கோல்டு ஸ்டேட்மெண்ட்ஸ்) ஆகிய தொகுப்புகளை வழங்கும். ஆரம்ப வாடிக்கையாளர்கள், ‘கேரட் கிளப் உறுப்பினராக சேர்ந்து, தயாரிப்பு கட்டணங்கள் இல்லாத சிறப்பு சலுகைகளை பெறலாம் என அவர் தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *