தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், தஞ்சை சீனிவாசபுரம் சேவப்ப நாயக்கன் வாரி வடகரையில் மிகவும் பழமையான மகா மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகம் அன்று பால் குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பக்தர்களுக்காக அபிஷேகம் நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டன. வேலைகள் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கடந்த 6-ந் தேதி காலை முகூர்த்த கால் பூஜை நடந்தது. இரவு காப்பு கட்டப்பட்டது. மறுநாள் காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு ஊர்வலமாக கோவில் விமானங்களை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து கற்பக விநாயகர், மஹா மாரியம்மன், முனீஸ்வரர் கலசங்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொன்டனர்.
விழா குழு நிர்வாகிகள் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்து அருட்பிரசாதம் வழங்கினார்கள். கோவில் திருப்பணிகளை திட்டக்குடி ஸ்தபதி விநாயகம் செய்தார். ஆகம பூஜைகளை சர்வசாதகம் ராஜு சிவாச்சாரியார் உபசர்வசாதகம் சந்திரசேகர ஐயர் ஆகியோர் செய்து இருந்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர். திங்கட்கிழமை முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.