கோவையில் ஜி ஸ்கொயர் குழுமம் 714 ஏக்கர் பரப்பளவில் பிரம்மண்டமாக செவன் ஹில்ஸ் எனும் புதிய வீட்டு மனை விற்பனை திட்டம் துவக்கம்
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் தொடர்ந்து வீட்டு மனைகள் விற்பனை தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் ‘ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ்’ எனும் பிரம்மாண்ட டவுன்ஷிப் திட்டம் கோவைபுதூர் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது…
இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..
இதில் ஜி ஸ்கொயர்’ குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான பாலா ராமஜெயம் புதிய செவன் ஹில்ஸ் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்..
கோவையை தமிழ்நாட்டின் ப்ரீமியம் தரத்திலான ரியல் எஸ்டேட் நகரங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் இந்த திட்டத்தை துவங்கியதாக கூறினார்..,
ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் திட்டம், மிகப்பிரம்மாண்டமாக 714 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் முதல் கட்டமாக 406 ஏக்கர் பரப்பளவில் 3,127 அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ப்ரீமியம் பிளாட்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், இதையடுத்து மீதமுள்ள 308 ஏக்கர் பரப்பளவானது. சிக்னேச்சர் வில்லாக்கள், மற்றும் அப்பார்ட்மெண்ட் டெவலப்பர்களுடனான கூட்டு செயல்பாடுகள் அடிப்படையிலான கட்டுமானங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு குத்தகை விடும் கட்டிடங்கள், வணிக பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள், மால்கள் மற்றும் மல்டிபிளக்ஸ்கள் உள்ளிட்டவை தகவல் தொழில்நுட்ப உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் எதிர்கால திட்டமாக வைத்துள்ளதாக தெரிவித்தார்..
மதுக்கரைக்கு அருகிலுள்ள கோவைப்புதூரில், பாலக்காடு வழித்தட இடைவெளிக்கு ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே முக்கியமான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு திட்டமானது, ரிசர்வ் காடுகளின் ஒரு ஓரமாக அமைந்துள்ளதால், இயற்கையாகவே இந்த டவுன்ஷிப் குறைந்த சுற்றுப்புற வெப்பநிலையில் உற்சாகமளிப்பதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்..