வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக கு. அப்துல் ரஹ்மான் வெற்றி பெற்றார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தேர்தல் நடைபெற்றது. அதில் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக வலங்கைமான் கு. அப்துல் ரஹ்மான் DME., அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், வலைத்தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.