பெருமாள்மலை ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் விழாவில்-ஐஜேகே சார்பில் 3ஆம் ஆண்டு அன்னதானம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள”தென் திருப்பதி” என்று அழைக்கப்படும் “பெருமாள் மலை” அடிவாரத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஐஜேகே
சார்பில் 3வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.
துறையூர் பெருமாள் மலை அடிவாரத்தில் 09/06/2025 அன்று காலை 9மணி அளவில் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஸ்ரீ பூதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
இவ்விழாவில் மூன்றாவது ஆண்டாக ஐ.ஜே.கே சார்பில் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் சுமார் 800 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் விஜயராகவன், அவைத் தலைவர் நல்லுசாமி, துறையூர் மேற்கு ஒன்றிய தலைவர் சதீஷ், இளைஞர் அணி பிரேம்குமார், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ரம்யா, துறையூர் வடக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், தெற்கு ஒன்றிய தலைவர் பாபு, கிழக்கு ஒன்றிய தலைவர் ரூபராஜ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்