பெருமாள்மலை தேர்த் திருவிழாவில்-ஸ்ரீ கிருஷ்ணா புளூமெட்டல்ஸ் சார்பில் 8 ஆம் ஆண்டு அன்னதானம்
துறையூர் ஜூன் -09
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள”தென் திருப்பதி” என்று அழைக்கப்படும் “பெருமாள் மலை” அடிவாரத்தில் 09/06/2025 அன்று காலை 9மணி அளவில் அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஸ்ரீ பூதேவி ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நிகழ்சியில் ஸ்ரீ கிருஷ்ணா புளூமெட்டல்ஸ் உரிமையாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சடமங்கலம் அமுதா ஜெயராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்தனர்.இதனை தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அமுதா ஜெயராமன் சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் அமுதா ஜெயராமன் குடும்பத்தினர்,
திருச்சி மணிகண்டன், நீலமேகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தலைவர் மெடிக்கல் முரளி, நகர் மன்ற தலைவர் செல்வராணி, மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,வீரபத்திரன், இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒப்பந்ததாரர் விஜயராகவன், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ரவி,கேகேபி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்