நூலககட்டிடத்தை முதல்வர் காணொலி மூலம் திறந்துவைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தல் கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலகக் கட்டிடத்தை தமிழக முதல்வர் இன்று செவ்வாய் கிழமை காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தட்டானேந்தல் கிராமத்தில் புதிய நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவில் முதுகுளத்தூர் ஒன்றிய ஆணையாளர் .ஜானகி அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றினார்.நூலகர் சு.சுடலைக்கண்ணு வரவேற்றுப்பேசினார்.
மேலும் விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
பால தண்டாயுதபாணி ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியை .ஜெலின் ஆரோக்கியமேரி, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அவர்கள் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள்
கமுதி நூலகர் இரா.கண்ணதாசன் மற்றும் கமுதி மைய நூலகர்கள் இராமேஸ்வரி விஜயராணி உமா மகேஸ்வரி பிரின்ஸ்டன் ஐஸ்வர்யா சந்தானசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் கிராமபொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் நிறைவாக க.ஆனந்த் அவர்கள் நன்றி கூறினார்.