கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகம் திறப்புவிழா..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலக கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்விழாவை கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில் பாலாஜி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை பார்வையிட்டு நூலக வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பதிவு செய்தார்.
உடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, கரூர் அரசு மருத்துவ மருத்துவமனை முதல்வர் மருத்துவர் லோகநாயகி, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா,மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மண்டல குழு தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, சக்திவேல் மற்றும் நூலக அதிகாரிகள், நிர்வாகிகள், மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் , நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.