வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ – ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் வைகாசி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் வைகாசி மாத பௌர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5- மணிக்கு தொடங்கி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.