மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் சார்பாக நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 48 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்,
காவல் துணை ஆணையர்(தெற்கு), காவல் துணை ஆணையர்(வடக்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோரிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.