தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறை இருவரை கைது செய்து, ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரியை மீட்டுள்ளனர்.

திருப்பூர் – தாராபுரம் திருப்பூர் பைபாஸ் சாலையில் இருந்து TN 11 AJ 7194 என்ற பதிவு எண் கொண்ட லாரி மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டது அறிந்த
லாரி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை தொடங்கினர்.

விசாரணையின் போது, தாராபுரம் அருகே உள்ள உப்பத்து ஆலம்பாளையம் பகுதியில், இடையேயன் கிணறு அருகே அமைந்துள்ள எஸ்.ஆர்.இ. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் காலி இடத்தில் லாரி மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குண்டடம் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் விசாரணையில்,

மணிகண்டன் (31), த/பெ சாமிநாதன், அர்ஜுனா காலனி, ஊத்துக்குளி, திருப்பூர்

முத்து என்கிற பெரியசாமி (30), த/பெ செல்லான், 399 கடம்பவரகலி, தொப்பம்பட்டி, அரூர் தாலுக்கா

ஆகிய இருவரும் இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. உடனடியாக கைது செய்தனர்
மீட்கப்பட்ட லாரியின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் வழக்குப் பதிவு செய்து தாராபுரம் நீதித்துறை நடுவர்களின் முன்னிலையில் ஆஜர்படுத்த அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *