தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள ராமச்சந்திரபுரத்தில் ஸ்ரீ ராதாகிருஷ்ணா மஹோத்ஸவ டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ பத்ரா மன்னாரார்ய் சுவாமிகள் பஜனை இல்லத்தில் 4-ம் ஆண்டு லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை ராதாகிருஷ்ணன் திருமஞ்சனம் மற்றும் மாலையில் லட்சுமி நரசிம்மர் அலங்காரமும், விஷ்ணு சதஸ்ரநாத அர்ச்சனை மற்றும் அய்யம்பேட்டை வெங்கட்ரமணா பாகவத் வாமிகள் பாகலதூர் சங்கத்தினால் பஜனை,பாட்டு பிறகு நரசிம்மருக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்”.இந்நிகழ்ச்சியை ஸ்ரீ ராதாகிருஷ்ண மஹோத்ஸவ அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.