திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்ற புரிசை தெருக்கூத்து கலைஞர் கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா கல்வி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார். பூங்குயில் சிவக்குமார், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க செயலாளர் ஆ.மயில்வாகனன், தலைமை ஆசிரியர் க. வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான கண்ணப்ப சம்பந்தன் பேசியதாவது: கடந்த ஆறு தலைமுறைகளாக இந்த தெருக்கூத்து கலையை பல்வேறு இடங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பரப்பியமைக்கு இந்திய அரசு பத்மஶ்ரீ விருதை வழங்கியுள்ளது. இதனால் மேலும் ஊக்கத்துடன் செயல்பட முயல்கிறேன். நலிவடைந்து வரும் தெருக்கூத்து கலையை மேலும் மெருகூட்ட அனைவரும் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், ரயில்வே சு.தனசேகரன், அரிமா எட்டியப்பன், நூலகர் தமீம், தலைமை ஆசிரியர் கோ.ஸ்ரீதர், ஆசிரியர்கள் ஆர்.அருள் ஜோதி, ரகுபதி, சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ்பாபு, கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் ஜி.விநாயக மூர்த்தி, அ.ஷாகுல் அமீது, புலவர் ஏழுமலை, சமூக ஆர்வலர் முகமது ஜியா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வை ஜோதிடர் கு.சதானந்தன் தொகுத்து வழங்கினார். இறுதியில் முதுகலை ஆசிரியர் க.பூபாலன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.