கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு
தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில்,திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணியினருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டன.
மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டுதலின்படி,அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி
நேற்று கமுதியில் திமுக வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கி இளைஞரணி நிர்வாகிகளுக்கு தீர்மான நோட்டுகளை வழங்கினார்
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிரஞ்சீவி, நகர இளைஞரணி அமைப்பாளர் செய்யது கரிமுல்லா மற்றும் துணை அமைப்பாளர்கள் முனியசாமி, மணிகண்டன், தேவஅரசன்,பாஸ்கரன்,வீரபிரசாத், ரவி ஆகியோருக்கு தீர்மான நோட்டுகள் வழங்கப்பட்டது